easy registration just 60secs for registration


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO



Share | 
 

 2010 காமன்வெல்த் போட்டி: பதக்க வேட்கையில் இந்தியா!

View previous topic View next topic Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
avatar

Posts : 255
Join date : 2010-09-30
Age : 27
Location : mercury

PostSubject: 2010 காமன்வெல்த் போட்டி: பதக்க வேட்கையில் இந்தியா!   Sun Oct 03, 2010 10:42 pm

புது தில்லி, அக். 3: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 19-வது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதல் அல்லது 2-வது இடத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை.

1951, மற்றும் 1982-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக இந்தியாவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டி இதுவே.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

கடந்த முறை மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 22 தங்கம் உள்பட 49 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா அதிகபட்ச பதக்கங்களை வென்றது 2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த போட்டிகளில்தான்.

இப்போட்டிகளில் 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை குவித்தது.

பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் போட்டியாக உள்ளவை துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகள்.

இது வரை நடந்த 18 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 271. இதில் துப்பாக்கி சுடுதலில் 74 பதக்கங்களையும், பளுதூக்குதலில் 93 பதக்கங்களையும் மல்யுத்தத்தில் 58 பதக்கங்களையும் இந்தியா பெற்றுள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கையில் இந்த 3 போட்டிகளில் மட்டும் இந்தியா பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 225. இம்முறை துப்பாக்கி சுடுதலில் மட்டும் 36 தங்கப் பதக்கங்கள் உள்ளன. சென்ற முறை மெல்போர்னில் நடந்த போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் சமரேஷ் ஜங் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இம்முறையும், அவரும் இந்தியாவின் இதர துப்பாக்கி சுடும் வீரர்களும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளனர்.

ஒலிம்பிக் தங்க வீரர் அபினவ் பிந்த்ரா, மானவ்ஜித் சிங் சாந்து, தேஜஸ்வினி சாவந்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கின்றனர். குத்துச் சண்டையில் 10 தங்கப் பதக்கங்களும், மல்யுத்தத்தில் 21 தங்கப் பதக்கங்களும், பளு தூக்குதலில் 15 தங்கப் பதக்ககங்களும் இப்போட்டியில் உள்ளன. இம்முறையும் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் இந்தியாவுக்கு கைகொடுக்கப் போவது இந்த 3 போட்டிகளும்தான் என்றால் அது மிகையாகாது.

மேலும் ஹாக்கியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முதலாக இம்முறை டென்னிஸ் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. சானியா மிர்சா, சோம் தேவ் தேவ்வர்மன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதில் பங்ககேற்கின்றனர். எனவே டென்னிஸிலும் பதக்கம் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அடுத்து இந்தியா இம்முறை வலுவாக உள்ள மற்றொரு போட்டி வில்வித்தை. காமன்வெல்த் போட்டியை பொறுத்தவரை வில்வித்தையில் இந்திய வீரர்கள் இது வரை எந்த பதக்கமும் வெல்லவில்லை. என்றாலும்கூட சமீபகாலமாக சாதனை நிகழ்த்தி வரும் முன்னணி வீரர்களான ஜெயந்த் தலுக்தார், ராகுல் பானர்ஜி, பம்பாயாலா தேவி, டோலா பானர்ஜி, தீபிகா குமாரி உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்பதால் இதிலும் பதக்கம் வெல்ல இந்தியாவுக்கு ஓரளவு வாய்ப்புகள் உள்ளன.

பாட்மிண்டனில் சாய்னா நெவால், சேத்தன் ஆனந்த் ஆகியோர் சாதிக்கக் காத்திருக்கின்றனர்.

தடகளம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், ரசிகர்களின் ஆதரவு வீரர்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறைந்தபட்சம் 100 பதக்கங்களையாவது வென்று பட்டியலில் முதல் அல்லது 2-வது இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

இன்றைய போட்டிகள்

வில்வித்தை

மகளிர் தனிநபர் போட்டிகள் - 70 மீ காலை 10 முதல்.

ஆடவர் தனிநபர் போட்டிகள்- 70 மீ

மகளிர் குழு போட்டிகள் -70 மீ

ஆடவர் குழு போட்டிகள்- 70 மீ பிற்பகல் 3 முதல்.

பாட்மிண்டன் காலை 9 முதல்.

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஆடவர் குழு போட்டிகள் பிற்பகல் 1.30 முதல்.

ஆடவர் குழு இறுதிப் போட்டி (தங்கம்) பிற்பகல் 4.30 முதல்.

ஹாக்கி

நியூசிலாந்து - வேல்ஸ்(பி பிரிவு மகளிர் ஆட்டம்) காலை 10.30- 12.

தென்னாப்பிரிக்கா- டிரினிடாட் (மகளிர் ஏ பிரிவு) பகல் 12.30- 2.

கனடா - மலேசியா (மகளிர் பி பிரிவு) பிற்பகல் 4 - 5.30.

இந்தியா -ஸ்காட்லாந்து (மகளிர் ஏ பிரிவு) பிற்பகல் 6- 7.30.

லான் பௌல்ஸ் பகல் 12 முதல்.

நெட்பால் காலை 9.30 முதல்(4 போட்டிகள்)

ஸ்குவாஷ் காலை 10 முதல் (5 போட்டிகள்)

நீச்சல் காலை 8.30 மணி முதல்.

(மொத்தம் 16 பிரிவுகள். இதில் 5 விளையாட்டுகள்

தங்கப் பதக்கத்துக்கு உரியது).

டேபிள் டென்னிஸ் காலை 9.30 முதல் (4 போட்டிகள்)

டென்னிஸ்

கலப்பு இரட்டையர் காலை 10 மணி முதல் (6 போட்டிகள்)

மகளிர் ஒற்றையர் ஆடவர் ஒற்றையர்

பளு தூக்குதல்

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு

(தங்கப் பதக்கம்) பிற்பகல் 3 முதல் 5.30 வரை

ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு

(தங்கப் பதக்கம்) பிற்பகல் 7.30 முதல் 10 வரை

_________________
★★★ POWER STAR ★★★

Back to top Go down
View user profile http://tamilrockerz.team-talk.net/index.htm
 
2010 காமன்வெல்த் போட்டி: பதக்க வேட்கையில் இந்தியா!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Rumored Release schedule for 2010 40k/WFB
» 2010 Junior Rimrocker Participants
» Corazon Classic Match 2010 ~
» YNWA's Latest Addition (20 March 2010)
» UFC 2010 - Fighter Stats Update

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: